Indonesia: இந்தோனேஷியாவில் ஜாம்பி மாகாணத்தில் ஜஹ்ரா என்னும் 54 வயது பெண்ணை காணவில்லை என்று அவளின் கணவர் பதறி போய் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். அப்படி தேடி போகும் வழியில் தன்னுடைய மனைவியின் செருப்பு, ஹெட்ஸ்கார்ஃப், கத்தி போன்றவை கீழே கிடந்ததைப் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தார்.
அடுத்த நாள் பலரிடம் உதவி கேட்டு, அவரும் கூட 300 நபர்களும் சேர்ந்து ஜஹ்ராவை தேடும் பணியில் முழுமையாக ஈடுபட்டனர். அந்த காட்டு பகுதியில் எப்படியாவது தன்னுடைய மனைவி கிடைத்து விட வேண்டும் என்று நம்பிக்கையுடன் கணவரும் தேட தொடங்கினார். அப்போது அங்கு சுமார் 22 அடி (6 மீட்டர்) நீளமுள்ள மலைப்பாம்பு நகர முடியாமல் படுத்திருந்தது தெரியவந்து. பாம்பின் வயிற்று பகுதி சற்று உப்பி இருந்ததால், அந்த பெண்ணை அது தான் விழுங்கியிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பாம்பின் தலையை வெட்டினர். அவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி, வயிற்று பகுதியில் அந்த பெண்ணை சடலமாக மீட்டெடுத்தனர். அதை பார்த்து அங்கிருந்த அனைவரும் பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…