Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

இந்தியாவின் தூய்மையான நகரம்.. 6வது முறையாக முதலிடத்தில் இந்தூர்!!

Sekar October 01, 2022 & 19:15 [IST]
இந்தியாவின் தூய்மையான நகரம்.. 6வது முறையாக முதலிடத்தில் இந்தூர்!!Representative Image.

இந்தூர் தொடர்ந்து ஆறாவது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சூரத் மற்றும் நவி மும்பை அடுத்த இரண்டு இடங்களில் உள்ளன. இன்று வெளியிடப்பட்ட மத்திய அரசின் வருடாந்திர தூய்மைக் கணக்கெடுப்பில், இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகள் 2022 இல் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் பிரிவில், மத்தியப் பிரதேசம் முதல் இடத்தையும், சத்தீஸ்கர் இரண்டாம் இடத்திலும் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்த ஆண்டு பெரிய நகரங்கள் பிரிவில் இந்தூர் மற்றும் சூரத் முதல் இரண்டு இடங்களைத் தக்கவைத்துக் கொண்டன. அதே நேரத்தில் விஜயவாடா தனது மூன்றாவது இடத்தை நவி மும்பையிடம் இழந்தது.

100க்கும் குறைவான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட மாநிலங்களில் திரிபுரா மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு சனிக்கிழமை விருதுகளை வழங்கினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்