ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. அதனை எதிர்த்து ஈரானில் மட்டுமல்லாது உலகளவில் ஈரான் பெண்களுக்கு சாதமாக போராட்டங்களை அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் ஈரான் நடிகை ஒருவர் ஹிஜாப் விவகாரத்தில் ஈரான் பெண்களுக்கு ஆதரவாக "ஆடைத் துறைப்பு" வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எல்னாஸ் நோரூசி என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “பெண்கள் இந்த உலகில் எங்கிருந்தாலும், எங்கிருந்து வந்தாலும் அவள் விரும்பியதை எப்போதும், எங்கு வேண்டுமானாலும் அணிய உரிமை வேண்டும். எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் அவளை விமர்சிக்கவோ, தீர்மானிக்கவோ அல்லது வேறுவிதமாக ஆடை அணியச் சொல்லவோ உரிமை இல்லை.
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. அவை மதிக்கப்பட வேண்டும். ஜனநாயகம் என்றால் முடிவெடுக்கும் அதிகாரம் என்பதே. ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் உடலைத் தீர்மானிக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். நான் இங்கு நிர்வாணத்தை விளம்பரப்படுத்தவில்லை, சுதந்திரத்தை ஊக்குவிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் அணிந்திருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டும் வீடியோ ஒன்றை இணைத்துள்ளார். மேலும் இப்படி தன்னுடைய கருத்தை தெரிவிக்க தெரியம் வேண்டும் என்று நெடிசன்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளாய் தெரிவித்து வருகின்றனர்.
எல்னாஸ் நோரூசி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இன்டர்நேஷனல் மாடலாக பணியாற்றுகிறார். இவர் 2018-ஆம் ஆண்டு நெட்ஃபிளக்ஸில் வெளியான ‘சாக்ரெட் கேம்’ (sacred games) தொடரிலும் நடித்திருக்கிறார்.
ஈரானில் தற்போது நடக்கும் நிகழ்வுகள் - செப்டம்பர் 10 ஆம் தேதி தெஹ்ரானில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 17 வயது சிறுமியான நிகா ஷகராமி என்பவர், போராட்டத்துக்குப் பின் காணாமல் போனார். அவரின் மரணத்திற்கு அரசாங்கம் மதவாத கும்பலை சாக்காக கூறி தப்பிக்க முயன்றனர். அப்படியாக "காவல்துறையினரால் நான் துரத்தப்பப்படுகிறேன்" என்று நிகா தன்னுடைய தோழியிடம் உரையாடும் ஆடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. அதனை கொண்டு பாதுகாப்புப்படையினர் தான் தன்னுடைய மகளின் மரணத்திற்கு காரணம் என்று அவர்கள் நம்புகின்றனர். மேலும் அங்கிருந்து 40 கிமீ தொலைவில் ஒரு கிராமத்தில் நிகா புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்து. பின்னர் தங்களுடைய மகள் இறந்து 10 நாட்கள் கழித்தே அவளின் உடலை பாக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் அது எங்கள் மகள் தான் என்று அடையாளம் காட்ட சில நொடிகள் மட்டுமே கொடுத்தனர் என்று அவர்கள் தெரிவித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…