ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, பல ஆண்டுகளாக காணாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் ஈரானில் நடந்துவரும் போராட்டங்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் திட்டமிடப்பட்ட போராட்டங்கள் என்று குற்றம் சாட்டினார்.
ஈரானின் அறநெறிப் போலீஸின் காவலில் இருந்த 22 வயதான மஹ்சா அமினியின் மரணம், நாடு தழுவிய அளவில் போராட்டங்களைத் தூண்டியது. இளம் பெண்ணின் மரணம் ஒரு சோகமான சம்பவம் என்று கூறிய கமேனி, இது தனது இதயத்தை உடைத்துவிட்டது என உருகி கூறினார்.
ஆனால், ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதி தான் இந்த மிகப்பெரும் போராட்டம் என்று அவர் போராட்டத்தை கடுமையாக கண்டித்தார். இந்த கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்று அவர் தெஹ்ரானில் உள்ள போலீஸ் மாணவர்களிடம் கூறினார்.
அமினியின் மரணத்தால் தூண்டப்பட்ட நாடு தழுவிய எதிர்ப்புகள் குறையாமல் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், கமேனி இது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…