Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தனியார் நிறுவனத்திற்காக 36 செயற்கைகோள்கள்.. சாதித்த இஸ்ரோ!!

Sekar October 23, 2022 & 10:35 [IST]
தனியார் நிறுவனத்திற்காக 36 செயற்கைகோள்கள்.. சாதித்த இஸ்ரோ!!Representative Image.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களின் (இஸ்ரோ) கனரக ராக்கெட் எல்விஎம்3-எம்2 தனது முதல் வணிகப் பயணத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன் வெப் நிறுவனத்தின் 36 பிராட்பேண்ட் தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை நேற்று வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியது.

இஸ்ரோவின் வர்த்தக பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனத்தின் வாடிக்கையாளரான ஒன் வெப் நிறுவனம் பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட விண்வெளி மூலம் இணைய இணைப்பு வழங்கும் உலகளாவிய தகவல் தொடர்பு நெட்வொர்க் ஆகும்.

இது அரசாங்கங்கள் மற்றும் வணிகங்களுக்கான இணைய இணைப்பை செயல்படுத்துகிறது. பாரதி எண்டர்பிரைசஸ் ஒன் வெப் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களில் ஒன்றாகும்.

இந்த வெற்றியை அடுத்து, இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத், விண்வெளி நிறுவனத்தில் உள்ள விஞ்ஞானிகளுக்கு தீபாவளி சீக்கிரமாகத் தொடங்கிவிட்டது என்று அறிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்