Crime : சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மணலி புது நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பவானி என்பவர் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பவானிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இதனையடுத்து, பவானி தினமும் அலுவலத்திற்கு ரயிலில் செல்லும்போது, பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் ரம்பி விளையாடி வந்துள்ளார். இந்த ரம்மி விளையாட்டை தொடர்ந்து அவர் விளையாடியதால் ரம்மி விளையாடிற்கு பவானி அடிமையாகியுள்ளார்.
மேலும், பவானி ரம்மி விளையாடுவதற்காக தனது 20 சவரன் நகையை விற்றுள்ளார். மேலும், தனது சகோதரியிடம் 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ரம்மி விளையாடியுள்ளர். இதில் ஏற்பட இழப்பு காரணமாக மனமுடைந்து நீண்ட நாட்களாக தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று பணம் பறிபோனதை நினைத்து மன உளைச்சலில் பவானி தன்வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…