Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை தாக்கல்… பல முக்கிய விவரங்கள் அம்பலம்.. சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணைக்கு பரிந்துரை..!

Gowthami Subramani October 18, 2022 & 11:25 [IST]
ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை தாக்கல்… பல முக்கிய விவரங்கள் அம்பலம்.. சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணைக்கு பரிந்துரை..!Representative Image.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு தாக்கல் செய்ய ஆறுமுகசாமி முன்னிலையில் ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டது.

இன்று தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இரண்டாம் நாளில் தொடங்கிய நிலையில், இன்று அதற்கான அறிக்கையை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டில் மீண்டும் இணைந்த சசிகலா, ஜெயலலிதா இடையே சுமுக உறவு இல்லை என்ற பரபரப்பு தகவல் ஆணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போல, 608 பக்கங்களில் இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், ஜெயலலிதாவின் உடல் நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதாக ஆணையம் தகவல் அளித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அவர் மயக்கமடைந்த பின்னர் நடந்த பிந்தைய நிகழ்வுகள் அனைத்துமே ரகசியமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மறைந்த முதல்வர் 22-09-2012 அன்று செயலற்ற நிலையில் இருந்து தான் இல்லத்திலிருந்து சென்றிருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இதில் எய்ம்ஸ் மருத்துவர்களும் தாங்கள் மேற்பார்வையிட மட்டுமே வந்ததாகவும், மருந்து எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை எனவும் ஆணையத்தில் தெரிய வந்துள்ளது.

மேலும், ஜெயலலிதாவிற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை எனக் கூறப்பட்டாலும், அவை எழுத்து மூலமாக பரிந்துரைக்கப்படவில்லை என்பது தெரிகிறது. இவ்வாறு அறியப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உள்ளிட்ட 4 பேர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆணையம் பரிந்துரை செய்யப்பட உள்ளது. மேலும், மறைந்த முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அவர் எப்போது வேண்டுமானாலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது. வெளிநாட்டு மருத்துவர்களின் உதவி கொண்டு ஆஞ்சியோ ட்ரீட்மென்ட் நடந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், விசாரணையில் அப்படி எந்தவொரு சிகிச்சையும் ஜெயலலிதாவிற்கு நடக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

மேலும், மருத்துவமனையில் இறந்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தவிர வேறு எந்த ஆதாரமும், ஆவணங்களும் ஆவணத்தில் முன்வைக்கப்படவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்த போதிலும், ஜெயலலிதாவிற்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என தெரியவருகிறது.

அதன் படி, சசிகலா, கே.எஸ்.சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரை குற்றம் செய்தவராகக் கருதி, அவர்களை விசாரணைக்குப் பரிந்துரை செய்ய ஆறுமுகசாமி ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்