மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு தாக்கல் செய்ய ஆறுமுகசாமி முன்னிலையில் ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் மீண்டும் இணைந்த சசிகலா, ஜெயலலிதா இடையே சுமுக உறவு இல்லை என்ற பரபரப்பு தகவல் ஆணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போல, 608 பக்கங்களில் இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், ஜெயலலிதாவின் உடல் நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதாக ஆணையம் தகவல் அளித்துள்ளது.
இதில் சில பகீர் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. டிசம்பர் 5 ஆம் தேதி மரணம் அடைந்ததாக கூறப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா, டிசம்பர் 4 ஆம் தேதியே இறந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ளது.
மேலும், இதய அறுவைசிகிச்சை செய்திருந்தால், ஜெயலலிதா உயிருடன் இருந்திருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆஞ்சியோ சிகிச்சைக்கு ஜெயலலிதா சம்மதித்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அவரது கடைசி நிமிடம் வரை ஆஞ்சியோ சிகிச்சை செய்யாமல் இருந்தது ஏன்? என ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
விரோதம் காரணமாக, வேண்டுமென்றே ஜெயலலிதாவிற்கு நடக்க இருந்த சிகிச்சையை நடக்க விடாமல் தடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…