Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

Kalaignar Birthday Special : கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்த கோமகன்!!

Sekar June 01, 2022 & 15:28 [IST]
Kalaignar Birthday Special : கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்த கோமகன்!!Representative Image.

Kalaignar Birthday Special : கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாக கொண்ட இந்தியாவில் மாநிலங்களின் உரிமைக்காக குரல் கொடுத்து பல உரிமைகளை பெற காரணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதிதான். இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாநில தலைநகரில் குடியேறுவதற்கு மூல காரணம் கலைஞர் கருணாநிதி தான் என்பது தெரியுமா? 

இந்தியா பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்று குடியரசு நாடாக மாறிய பின்பு டெல்லியில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவரும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரதமரும் கொடியேற்றுவது வழக்கம்.

ஆனால் மாநிலங்களைப் பொறுத்தவரை, ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட் 15 என இரண்டு தினங்களிலுமே ஆளுநர் தான் கொடியேற்றி வந்தார். இந்த நிலையில், தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரதமர் டெல்லியில் கொடியேற்றுவதைப் போல், ஒவ்வொரு மாநில தலைநகர்களிலும் அந்த மாநில முதல்வர்கள் கொடியேற்ற அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.

அப்போது இருந்த பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசும் இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்துகொண்டு கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து 1974 ஆம் ஆண்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடி மரத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல்வர் கருணாநிதி கொடியேற்றினார்.

இரும்புப் பெண்மணி இந்திராகாந்தியிடமே பேசி, அனைத்து மாநில முதல்வர்களுக்குமான உரிமையை பெற்றுத் தந்த கலைஞர் கருணாநிதியை அப்போது அனைத்து மாநில முதல்வர்களும் வெகுவாக பாராட்டினர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்