கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில், மாணவியின் பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி சக்தி மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த மாணவி கடந்த ஜூலை மாதம் விடுதியில் தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் கூற, பல களேபரங்களுக்கு மத்தியில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் மாணவி மரணம் தொடர்பான வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பாக விசாரணைக்கு வந்தபோது சிபிசிஐடி சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுப்பதாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுள்ளார்.
மேலும் விடுதியில் மாணவி பயன்படுத்தி வந்த செல்போனை வழங்க பெற்றோர் மறுப்பதாகவும், மரபணு சோதனைக்கு மாதிரிகளை வழங்கவும் அவர்கள் மறுக்கிறார்கள் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதையடுத்து, நீதிபதி மாணவி விடுதியில் செல்போன் பயன்படுத்தி இருந்தால், அதை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு, அக்டோபர் 10ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…