கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியாக இல்லை என்றும், டிஎன்ஏ பரிசோதனை மூலம் தண்னி கொச்சைப்படுத்த முயல்வதாக குற்றம் சாட்டி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி பின்னர் இறுதியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், ஸ்ரீமதியின் பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை சமீபத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16வது மாநில மாநாடு கடலூரில் நடந்தபோது, மாணவி ஸ்ரீமதிக்காக போராடிய தாய் செல்வியை அழைத்து பாராட்டி கவுரவித்ததோடு, ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதி கேட்டு கோஷம் எழுப்பப்பட்டது. பின்னர் கண்ணீருடன் பேச்சை தொடங்கிய ஸ்ரீமதியின் தாயார் செல்வி, தனது மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க மாதர் சங்கம் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வி, தனது மகள் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் சரியாக விசாரிக்கவில்லை என்று குற்றம் சாட்டியதோடு, தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்வது எதற்காக என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் டிஎன்ஏ சோதனை மூலம் தன்னை கொச்சைப்படுத்த முயல்வதாகவும் செல்வி சிபிசிஐடி போலீசார் மீது குற்றம் சாட்டினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…