Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

இரத்த தான தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன் செய்த ட்வீட்..!

Gowthami Subramani Updated:
இரத்த தான தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன் செய்த ட்வீட்..! Representative Image.

ஆண்டுதோறும் ஜூன் 14 ஆம் நாள், உலக இரத்த தான தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை வெளிப்படுத்துவதுடன், இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும், இந்த சிறப்பு தினம் குறித்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தனது சார்பில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, “இரத்த தானம் எனும் சொல் ஆனது, நற்பணி நாயகர்களின் இரத்தநாளங்களில் ஓடுவது. பிளாஸ்மா தானமும், இரத்த தானமும் செய்வதன் வழியாக, ஓர் உயிருக்கு வாழ்வைப் பரிசளிக்கிறீர்கள். இந்த அரும்பணியை சீரான இடைவெளியில் தவறாமல் தொடருங்கள். குருதிக் கொடை நல்கும் ஒவ்வொருவரும் போற்றுதலுக்குரிய கதாநாயகர்கள். உதிரம் கொடுப்போர் உயர்ந்தோரென உலக இரத்ததான தினத்தில் வாழ்த்துகிறேன்.” என்று ட்வீட் செய்துள்ளார். கமல்ஹாசனின் இந்த ட்வீட் ஆனது, ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்