Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,050.89
561.90sensex(0.78%)
நிஃப்டி22,136.70
140.85sensex(0.64%)
USD
81.57
Exclusive

பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம்.. அஞ்சலி செலுத்திய தலைவர்கள்!!

Sekar October 02, 2022 & 12:19 [IST]
பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம்.. அஞ்சலி செலுத்திய தலைவர்கள்!!Representative Image.

தமிழகத்தில் கல்விக் கண் திறந்த காமராஜரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், பல்வேறு தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர், இரண்டு பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கர், எளிமையானவர், சிறந்த அரசியல்வாதி, தலைசிறந்த தலைவர் என பலவாறு புகழப்படும் தலைவர் காமராஜர், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அவரின் ஆட்சி காலம் தமிழகத்தின் பொற்காலங்களில் ஒன்றாக இருந்தது. மாணவர்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்க முதன்முறையாக பள்ளியில் மத்திய உணவு திட்டத்தினை அமல்படுத்தினார். 

ஏராளமான அணைகளையும், பாலங்களையும், பள்ளிக் கூடங்களையும் கட்டிய காமராஜர் பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கல்விக் கண் திறந்தவர், கர்மவீரர் என்று இன்றும் பலரின் ஞாபகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் காமராஜர்.  1975இல் காமராஜர் மறைந்த நிலையில், 1976ம் ஆண்டு இந்திரா காந்தி அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்தது.

இந்நிலையில் அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்