கர்நாடக மாநிலத்தின் 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கடந்த மே 10, 2023 அன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. கர்நாடக சட்டமன்ற இடைதேர்தலில் மொத்தம் 224 சீட்டுகள் ஒதுக்கப்பட்டது. இதில் 113 சீட்டுகள் அதிகபட்சமாக வெற்றி பெரும் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும். இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று மே 13, 2023 அன்று நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சியினர் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தனர். ஆளுங்கட்சியாக பாஜக 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சியினர் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்று தேர்ந்தெடுக்க வெற்றி பெற்ற தங்கள் கட்சியின் எம்.எல்.ஏ-க்களை அழைத்து கூட்டம் ஒன்று நடத்தி வருகின்றனர். அதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, கேபிசிசி தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…