ஐஐடி பட்டதாரி ஒருவர் தனது மனைவியை இயற்கைக்கு புறம்பான வகையில் உடலுறவு வைக்குமாறு டார்ச்சர் செய்வதாக அவரது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பெண் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர் மற்றும் அவரது கணவர் பெங்களூரைச் சேர்ந்தவர். இருவரும் ஐஐடி மும்பையில் படிக்கும்போது காதலித்துள்ளனர். பின்னர் பெற்றோ சம்மதத்துடன் இருவரும் 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் பெங்களூரில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், திருமணத்திற்கு பின்பு மனைவியிடம் இயற்கைக்கு புறம்பான வகையில் உடலுறவு கொள்ளுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் ஒருகட்டத்தில் வெறுத்துப்போன மனைவி கோபித்துக்கொண்டு சத்தீஸ்கரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
எனினும் சிறிது காலத்திற்கு பின் சத்தீஸ்கர் சென்று மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் பெங்களூர் அழைத்து வந்துள்ளார். ஆனால் திரும்பவும் அதே கொடுமையை செய்துள்ளார். இதனால் பொறுக்கமுடியாத அந்த பெண் மீண்டும் கணவர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை தனது மாமனாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தீஸ்கர் காவல்துறையை அணுகி புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சத்தீஸ்கர் காவல்துறை அதை பின்னர் பெங்களூர் காவல்துறைக்கு இடம் மாற்றியது. ஆனால், பெங்களூரு காவல்துறை தனது விசாரணையின் போது முக்கிய குற்றப்பிரிவை வழக்கில் சேர்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் பெங்களூர் உயர் நீதிமன்ற நாடியுள்ளார். இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு, பெங்களூர் காவல்துறை நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், வழக்கை முறையாக விசாரித்து இரண்டு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…