ஓலா, யூபர், ரேபிடோ உள்ளிட்ட ஆட்டோ சேவைகளுக்கு கர்நாடக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆன்லைன் மூலம் புக் செய்யப்பட்டு ஆப் அடிப்படையிலான கேப் மற்றும் பைக்களுக்கு சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டு, கர்நாடக மாநில அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மூன்று நாள்களுக்குள் கர்நாடகாவில் தங்கள் ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடகா மாநில போக்குவரத்துத் துறை ஓலா, யூபர், ரேபிடோ நிறுவனங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
அந்த அறிக்கையில், ஓலா, யூபர், ரேபிடோ நிறுவனங்களின் ஆட்டோ சேவைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமான கட்டணத்தை பயணிகளிடம் வசூலிக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. அதன் படி, இதற்கு நிறுவனங்கள் பதில் அளிப்பதற்கும், இணக்க அறிக்கையைத் தாக்கல் செய்யவும் 3 நாள்கள் அவகாசம் அளித்துள்ளது.
அதாவது, இந்த ஆப் மூலம் புக் செய்யப்பட்டு வரும் வாகன சேவைகளில் 2 கி.மீ-க்கும் குறைவான தூரத்திற்கு குறைந்தபட்சம் 100 ரூ வாங்குவதாக புகார்கள் வந்துள்ளது. ஆனால், விதிமுறைகளின் படி, ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் 2 கி,மீட்டருக்கு 30 ரூபாயும், அதன் பின் வரும் ஒரு கிலோ மீட்டருக்கு 15 ரூபாயும் பெறலாம். ஆனால், இந்த நிறுவனங்கள் கட்டண விதிகளுக்கு மாறாக அதிக கட்டணத்தை வசூலித்து வருவதால், மாநில காவல் துறை அதிகாரிகள் ஆட்டோ ரிக்ஷாக்களை இயக்க தகுதியற்றதாக அறிவித்துள்ளனர்.
பெங்களூரில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தினைத் தொடர்ந்து, உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களது சொந்த மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி செயலி அடிப்படையிலான பயண திட்டத்தைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அதன் படி, “நம்ம யாத்ரி” என்ற செயலி வரும் நவம்பர் 1 ஆம் நாள் முதல் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…