Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

உங்க பணம் யாருக்கு வேணும்.. முன்னாள் முதல்வரிடம் சீறிய கர்நாடக பெண்!!

Sekar July 16, 2022 & 11:24 [IST]
உங்க பணம் யாருக்கு வேணும்.. முன்னாள் முதல்வரிடம் சீறிய கர்நாடக பெண்!!Representative Image.

கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா நேற்று பாகல்கோட் சென்று, கெரூர் வன்முறை சம்பவத்தில் காயமடைந்தவர்களைச் சந்தித்துப் பேசினார். 

கடந்த வாரம் கர்நாடகாவின் பாகல்கோட்டில் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த இரு குழுக்களிடையே வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து கெரூர் மாவட்டத்தில் 144 தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து முன்னாள் முதல்வர் சித்தராமையா அங்கே சென்றார். அவரது வருகையின் போது, ​​வன்முறையின் போது கணவர் காயமடைந்ததற்காக, சித்தராமையாவால் வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை அவரது வாகனத்தின் மீது ஒரு பெண் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

"நாங்கள் விரும்புவது நீதிதான், இழப்பீடு அல்லது அனுதாபம் அல்ல. எனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. சித்தராமையாவிடமோ அல்லது வாக்குக் கேட்க வரும் வேறு யாரிடமோ என்னால் தினமும் பிச்சை எடுக்க முடியாது." என்று அவர், சித்தராமையாவின் வாகனத்தின் மீது கரன்சி நோட்டுகளை வீசி கோபமாக கூறினார்.

இவரது கணவர் முகமது ஹனிப் கெரூர் வன்முறையில் காயமடைந்தார். "இந்த சம்பவத்திற்குப் பிறகு, எனது கணவர் குறைந்தது ஒரு வருடமாவது படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும். என் குடும்பத்தை யார் கவனிப்பார்கள்? நான் கேட்பது நீதி. எனக்கு நீதி தேவை, இழப்பீடு அல்லது அனுதாபம் அல்ல." என்று அவர் மேலும் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்