Wed ,Feb 01, 2023

சென்செக்ஸ் 59,330.90
-874.16sensex(-1.45%)
நிஃப்டி17,604.35
-287.60sensex(-1.61%)
USD
81.57
Exclusive

நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்! 

Kanimozhi Updated:
நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்! Representative Image.

கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி நெல்லையப்பர் கோவிலில் இன்று இரவு பரணி தீபம் ஏற்றப்பட்டது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் ஒன்று இந்த கோவிலில் மாதம்தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.  கார்த்திகை மாத திருவிழாவை ஒட்டி கார்த்திகை தீப சொக்கப்பனை கொளுத்துவது மிக சிறப்பு வாய்ந்தவையாகும்.

இந்நிலையில் திருக்கார்த்திகையை ஒட்டி ருத்ர தீபம் சொக்கப்பனை நாளை மாலை 6:45 முதல் இரவு 7.15 வரை நடைபெற உள்ளது. இதற்காக இன்று நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாரணையும் நடைபெற்றது

 இதைத்தொடர்ந்து நெல்லையப்பர் சன்னதிக்கு முன்பு இன்று இரவு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதன் பிறகு பரணி தீபத்திற்கு சிறப்பு தீபாராணை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

. இந்த பரணி தீபத்தை நாளை வரை தீபம் எரியும், பின்னர் நாளை இரவு சாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்து சென்று பரணி  தீபம் எடுத்துக்கொண்டு சொக்கப்பனை கொளுத்தப்படும் முதலில் நெல்லையப்பர் கோவிலுக்கு முன்பு அதன் பிறகு காந்துமதி அம்பாள் கோவிலுக்கு முன்பும் சொக்கப்பனைகள் கொளுத்தப்படும்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்