ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் பயங்கரவாதிகளால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
விஜய் குமார் குல்காம் மாவட்டத்தில் உள்ள எல்லாகுவாய் தேஹாட்டி வங்கி எனும் ஒரு கிராமப்புற வங்கியின் கிராம கிளையில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். காலையில் வங்கிக் கிளைக்குள் நுழைந்தபோது அவர் தாக்கப்பட்டார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், வங்கி மேலாளரைக் கொன்ற தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்துள்ளனர்.
இந்நிலையில், தொடர்ந்து தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்படும் நிலையில், காஷ்மீரில் பணிபுரியும் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் ஜம்முவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு காஷ்மீரில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்க ஜூன் 3 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது.
15 நாட்களில் இரண்டாவது முறையாக இந்த கூட்டம் கூட்டப்படுவது விஷயத்தின் தீவிரத்தன்மையை உணர்த்துகிறது. இந்நிலையில், வரக்கூடிய நாட்களில் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட கடும் நடவடிக்கைகளை ராணுவம் எடுக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…