Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஆறு வருசத்துக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி நெட்ஃபிளிக்ஸ் சீரிஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்.. | Kayla Unbehaun Unsolved Mysteries

Nandhinipriya Ganeshan Updated:
 ஆறு வருசத்துக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி நெட்ஃபிளிக்ஸ் சீரிஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்.. | Kayla Unbehaun Unsolved MysteriesRepresentative Image.

பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நிஜ வாழ்க்கை குற்றங்கள் அடிப்படையிலான 'Unsolved Mysteries' என்ற சீரிஸ் ஒன்றை வெளியிட்டு வருகிறது. ஒரு புலனாய்வு த்ரில்லராக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் மூலமாக இதுவரை உலகம் முழுவதிலும் இருந்தும் எத்தனையோ வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. அதாவது, நடைமுறையில் கண்டே பிடிக்கமுடியாத மர்ம வழக்குகள், கொலை வழக்குகள், புராணக்கதைகள், காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகள் போன்றவற்றை இந்த சீரியஸ் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அப்படி வெளியான ஒரு எபிசோடு மூலமாக தான் 2017ல் காணாமல் போன ஒரு சிறுமி தற்போது 15வயதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

கெய்லா அன்பெஹான் என்ற 9 வயது சிறுமி ஜூலை 4, 2017 அன்று சிகாகோவிலிருந்து வடமேற்கே 45 கி.மீ தொலைவில் உள்ள இல்லினாய்ஸின் சவுத் எல்ஜின் என்ற பகுதியில் இருந்து தனது சொந்த தாயாரால் கடத்தப்பட்டார். தற்போது இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்று கண்டுப்பிடிக்க முடியாமலே இருந்துவந்தது. இதற்கிடையில், கடந்த நவம்பர் 2022 இல் அவர் காணாமல் போனதைக் குறிப்பிடும் தீர்க்கப்படாத மர்மங்கள் சீசன் 3, எபிசோட் 9 Netflix இல் ஒளிபரப்பப்பட்டது. இது முழுக்க முழுக்க காணாமல் போன குழந்தைகளை பற்றி விவரிக்கும் ஒரு எபிடோகும். இதில் கெய்லா அன்பெஹான் மற்றும் அவருடைய தாய் ஹீதர் அன்பெஹான் ஆகியோரின் புகைப்படங்கள் குறிப்பிடப்பட்டன. 

இந்த நிலையில், கடந்த மே 13,2023 ஆம் தேதி கெய்லா அன்பெஹான் இடம்பெறும் Netflix இன் Unsolved Mysteries சீரிஸின் அந்த எபிசோடைப் பார்த்த வட கரோலினாவில் உள்ள ஒரு கடை உரிமையாளர் ஆஷெவில்லே ஷாப்பிங் சென்டரில் சிறுமி அடையாளம் கண்டுள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே விரைந்த போலீசார் கெய்லா அன்பெஹானை பத்திரமாக மீட்டு அவருடைய தந்தையிடம் சேர்த்துள்ளார். தற்போது அவருடைய வயது 15. ஒரு சீரிஸ் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட இச்சம்பவம் உண்மையில் வியக்கத்தக்கதாக உள்ளது.

'கெய்லா வீட்டில் பாதுகாப்பாக இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தென் எல்ஜின் காவல் துறை, காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் மற்றும் அவரது வழக்கில் உதவிய அனைத்து சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்' என்று அவரது தந்தை ரியான் இசெர்கா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நன்றிகளை தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்