கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு கொரோன பாதிப்பானது 1000த்தை கடந்துள்ளது. மேலும் அங்கு புதிதாக 197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா பரவல் விகிதம் 7.07 சதவீதமாக உள்ளது. இப்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 5,728 ஆக உயர்ந்தது.
மேலும் கடந்த இரண்டு வாரத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது, இது மக்களிடையேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோட்டையும், ஆகிய பகுதிகளில் கொரோனா அதிகரித்து காணப்படுகிறது. இந்த வாரம் முதல், கோடை விடுமுறைக்கு பின் கேரளாவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் இன்னும் தொற்றின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு செல்வதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர்கூறும்போது, மாணவர்களை பெற்றோர்களும் ஆசிரியர்களும் தினமும் பரிசோதிக்க வேண்டும். மேலும் கொரோனா பாத்திப்பு ஏற்பட்டுள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்ல கூடாது. 12வயதிற்கு அதிகமான மாணவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள மருத்துவ சுகாதார நிபுணர்கள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
கேரளாவை போல, மராட்டியத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நான்காவது அலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…