Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மண் ஆய்வு..!

madhankumar June 04, 2022 & 14:57 [IST]
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மண் ஆய்வு..!Representative Image.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மண் ஆய்வு நடைபெற்று வருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மதுரையில் அவர் பேசியபோது:மாணவர்களின் அறிவியல் முன்னேற்றத்திற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆண்டிற்கு 4 - 5 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படுகிறது.மாணவர்களுக்காக கோடை கால பயிற்சி வழங்கப்படுகிறது என கூறிள்ளார். மேலும் தொடர்ந்து விழிப்புணர்வு இல்லாததால் குறைந்த அளவு மாணவர்களே பங்குபெற்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

விரைவில் இந்த நிலை மாற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், துாத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 2,200 ஏக்கர் நிலம் தேவையாக இருந்ததில், மாநில அரசு 1,850 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி கொடுத்துள்ளது.

அங்கு ஏவுதளம் அமைப்பதற்கான மண் ஆய்வு நடைபெற்று அவருகிறது, விரைவில் அது முடிந்த உடன் ஏவுதளம் அமைக்கும் பணியானது துவங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதில், நாம் இன்னும் இலக்கை அடையவில்லை. படிப்படியாக நாம் முன்னேறி வருகிறோம் என கூறியுள்ளார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்