Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

ஆணவக்கொலை.. வீட்டுக்கு அழைத்து விருந்து போட்டு.. தஞ்சாவூரில் கொடூரம்!!

Sekar June 15, 2022 & 18:18 [IST]
ஆணவக்கொலை.. வீட்டுக்கு அழைத்து விருந்து போட்டு.. தஞ்சாவூரில் கொடூரம்!!Representative Image.

கும்பகோணம் அருகே சாதி மாறி காதலித்த பெண்ணை கணவருடன் விருந்துக்கு வீட்டுக்கு அழைத்து கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது சோழபுரம் எனும் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சரண்யா ஒரு தனியார் மருத்துவனையில் நர்ஸாக வேலை பார்த்து வந்துள்ளார். சரண்யா மோகன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால் சரண்யாவின் குடும்பம் சரண்யாவுக்கும் அவரது உறவினரான ரஞ்சித்குமாருக்கும் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டிருந்தது. சரண்யா மோகனை காதலிக்கும் விஷயம் அவரது அண்ணன் சக்திவேலுக்கு தெரிந்துவிட்ட நிலையில், உடனடியாக ரஞ்சித் குமாருடன் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகளை தொடங்கியுள்ளார்.

இதையும் படிங்க : வைரமுத்துவின் இரட்டை அர்த்த பாடல் வரிகள்....அடச்சீ...கருமம் கருமம்...!

இதனால் உஷாரான சரண்யா யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி மோகனை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 5 நாட்களாக இருவரும் மோகன் வீட்டில் வசித்து வந்த நிலையில், அடகு வைத்த நகையை மீட்பதற்காக சரண்யா சோழபுரம் வந்துள்ளார். சரண்யா வந்ததை அறிந்துகொண்ட அவரது அண்ணன் சக்திவேல் சரண்யாவிடம் வந்து சாதாரணமாக பேச்சு கொடுத்துள்ளார்.

சரண்யாவுடன் சமாதானம் பேசிய சக்திவேல், வீட்டில் மாப்பிள்ளை விருந்து வைத்திருப்பதாக கூறி சரண்யாவை கணவரைக் கூட்டி வருமாறு அழைத்துள்ளார். அன்பாகக் கூறிய அண்ணனின் வார்த்தையை நம்பி சரண்யா மோகனுடன் சக்திவேல் வீட்டுக்கு சென்றுள்ளார். 

அங்கு இருவரும் விருந்து சாப்பிட்டுவிட்டு கிளம்ப முற்பட்ட நிலையில் சக்திவேலும், ரஞ்சித்குமாரும் சேர்ந்து சரண்யா மற்றும் மோகனை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவிகளுக்கு ஒரு புதிய அப்டேட்…! ரூ.1000 நிதி குறித்த அறிக்கை..! 

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட மோகன் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் கொலை செய்த சக்திவேலின் குடும்பம் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. 

கலப்பு திருமணம் செய்த புதுமண தம்பதியை வீட்டுக்கு அழைத்து விருந்து போட்டு சொந்த அண்ணனே ஆணவக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்