சோழர் காலத்து பாணியில் உலகிலேயே மிகவும் உயரமான நடராஜர் சிலையை வடிவமைத்து சாதனை புரிந்த கும்பகோணம் சிற்பி வரதராஜனுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலில் கட்டப்பட்டுள்ளதன் அடிப்படையில், சோழர் கால பாணியில் 23 அடி உயரத்திலும், 17 அடி அகலத்திலும், 15 டன் எடையில் உலகில் மிக பிரம்மாண்டமான நடராஜர் சிலையை கும்பகோணம் அருகே திம்மக்குடியில் உள்ள சிற்பி வரதராஜன் வடிவமைத்துள்ளார்.
இந்த சிலை கடந்த மாதம் நிறுவப்பட்ட நிலையில், சிலையினை காண நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலமான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்று சிலையினை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகில் மிக உயரமான, ஒரே வார்ப்பில் வடிவமைக்கப்பட்ட இந்த பிரமாண்டமான நடராஜர் சிலையை வடிவமைத்த சிற்பி வரதராஜனுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய விருதுகளை வழங்கி கௌரவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…