கன்னியாகுமரி: நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டை இல்லாமல் நுழைய முயன்ற முதியவரை, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் தடுத்து நிறுத்தி சட்டையை அணிந்து வர கூறியதால் முதியவர் போலீசாரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனுநாள் என்பதால் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டை அணியாமல் திடீரென உள்ளே நுழைய முயன்ற அரியபெருமாள் காலனியை சேர்ந்த சதீஷ் என்ற முதியவரை பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலர் தடுத்து நிறுத்தி சட்டை அணியாமல் உள்ளே செல்லக் கூடாது எனவும், எதற்காக நீங்கள் மாவட்ட ஆட்சியாளரை சந்திக்க வேண்டும் எனவும், கேட்டதால் கோபப்பட்ட முதியவர் பெண் காவலரை மிரட்டும் தொனியில் பேசியும், ஏன் உள்ளே செல்லக்கூடாது என்னிடம் ரூல்ஸ் பேசக்கூடாது என்றார்.
பின்பு அந்த ஆட்சியில் இப்படி, இந்த ஆட்சியிலும் இப்படினு என்று அரசியல்வாதிகளை தேவை இல்லாத வார்த்தையால் வசைபாடினார். பின்பு நான் மந்திரவாதி என்றும், என்னை உள்ளே விடுமாறு கூறினார். பாதுகாப்பு பணியில் பெண் காவலர் அவரை அதிகமாக பேசவேண்டாம் சட்டை அணிந்து வந்தால் உள்ளே செல்ல அனுமதி அளிப்பதாகவும் கூறினார்.
உடனடியாக எங்கேயோ இருந்து சட்டையை எடுத்து வந்து அணிந்தார். எதற்க்காக வந்தீர்கள் என்று கேட்டதற்க்கு நான் ஏற்கனவே எடுத்த ஆதார் கார்டு எந்த பயனும் இல்லை எனவும், இந்த கார்டின் விவரங்களை கேட்டு அறிவதற்காக வந்துள்ளதாகவும் கூறினார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஆதார் மையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டை அணியாமல் முதியவர் ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…