Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Latest News Today: இன்ஸ்டகிராம் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்…! தோழியுடன் மாயமான சிறுமி…

Gowthami Subramani April 23, 2022 & 07:40 [IST]
Latest News Today: இன்ஸ்டகிராம் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்…! தோழியுடன் மாயமான சிறுமி…Representative Image.

Latest News Today: கோயம்புத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தோழியுடன் சேர்ந்து மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா சூழ்நிலையினால், பள்ளிக்குழந்தைகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட முடியவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மூலம் குழந்தைகளுக்குக் கல்வி பயில்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னே, மடிக்கணினி, கணினி போன்றவற்றினைக் கொண்டே இது போன்ற வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் இன்று பெரும்பாலும் அலைபேசியைப் பயன்படுத்தி வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்த சூழ்நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செல்போன் அனைவரும் வைத்திருங்கள் என்று கூறி வந்தது. மேலும் இவர்கள் கூகுள் மீட். ஜூம் மீட் மற்றும் வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து இதைப் பயன்படுத்தி கல்வி கற்றனர். ஆனால், குழந்தைகளிடம் செல்போனை குடுத்தாலும், சரியான முறையில் உபயோகிக்கப்படுகிறார்களா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இல்லையெனில், சமூக வலைத் தள பக்கங்களைப் பொழுதுபோக்காக செல்லும் மாணவர்கள் அதில் மிக அதிக அளவில் மூழ்கிப் போய் விடுகின்றனர். இதனால், ஏராளமான பாதிப்பு இருக்கிறது என்று யாரும் அறியாத ஒன்று.

அவ்வாறு இருக்கும் போது தான், கோயம்புத்தூரில் உள்ள எட்டாம் வகுப்பு கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர் இவர் பெற்றோர். ஆனால், சிறுமி வீட்டுக்குத் தெரியாமல் இன்ஸ்டகிராமைப் பதிவிறக்கம் செய்து அதனை உபயோகித்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால், இன்ஸ்டாக்ராமில் ரொம்ப அதிக நேரமாக மூழ்கி, அதிலேயே அதிக நேரம் செலவிட்டிருக்கிறாள். இதனால், மாணவியின் தந்தை அவரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

தந்தை சொன்னதையும் மீறி, அவர்களுக்குத் தெரியாமல் மாணவி நோட்டுப்புத்தகத்தில் மறைத்து வைத்து இன்ஸ்டாக்ராமைப் பயன்படுத்தி உள்ளார். இதனால், மிகவும் ஆத்திரம் அடைந்த மாணவியின் தந்தை செல்போனைப் பறித்து அதில் இருந்த இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற செயலியை அன் இன்ஸ்டால் செய்துள்ளார்.

இன்ஸ்டக்ராமில் அடிக்ட் ஆன அந்த மாணவியால், அதனைப் பயன்படுத்தாமல் போனதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார். இதனால், பள்ளிக்குச் செல்வதாகக் கூறிய சிறுமி தனது தோழியுடன் பெரியம்மா வீட்டிற்குச் செல்ல சென்னைக்குப் புறப்பட்டிருக்கிறார்.

மகளைக் காணாத தேடிய தந்தை அந்தப் பகுதியில் உள்ள மகளிர் காவல் நிலயத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை அடுத்து விசாரணை செய்த கோவை போலீசார், இரண்டு சிறுமிகளும் சென்னைக்கு ரயின் ஏறி சென்றுள்ளனர் என்று அறிந்தனர். கோயம்புத்தூர் போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் காவலர்களிடம் அனைத்து விவரங்களையும் கூறி இரண்டு சிறுமிகளையும் குழந்தைகள் நல அமைப்பினரிடம் இடம்பிடித்து கொடுத்துள்ளனர். மேலும், அவர்களைக் கோயம்புத்தூர் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளி செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்