Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

639 லெவல் கிராசிங் கேட்கள் அகற்றப்பட்டுள்ளது - தெற்கு ரயில்வே..!

madhankumar June 01, 2022 & 14:16 [IST]
639 லெவல் கிராசிங் கேட்கள் அகற்றப்பட்டுள்ளது - தெற்கு ரயில்வே..!Representative Image.

தமிழ்நாட்டில் 639 லெவல் கிராசிங் கேட்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வேத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: லெவல் கிராசிங்குகளில் விபத்துக்களைத் தடுப்பதில் கவனம் செலுத்தி, சாலை, ரயில் போக்குவரத்தை சீராக இயக்க, ரயில்வே லெவல் கிராசிங் கேட்களை நீக்கிவருகிறது. அதன்படி தமிழ்நாட்டில், 2014 முதல் 2022 வரையிலான 8 ஆண்டு காலத்தில் மொத்தம் 639 ஆளில்லா லெவல் கிராசிங் கேட்கள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல் 2014 முதல் 262 ஆட்களையுடைய லெவல் கிராசிங் கேட்கள் அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது. 

மேலும் கடந்த 2018 செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 100% ஆளில்லா லெவல் கிராசிங் கேட்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் பணியாட்களை கொண்டுள்ள லெவல் கிராசிங் கேட்கள் ரயில்வேயால் கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு வருகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்