Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

தீண்டாமை வன்கொடுமை...வழக்கு விசாரணையில்...நீதிமன்ற பதிலடி!

Priyanka Hochumin September 28, 2022 & 16:44 [IST]
தீண்டாமை வன்கொடுமை...வழக்கு விசாரணையில்...நீதிமன்ற பதிலடி!Representative Image.

தென்காசி பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வைத்த நபரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மதுரைக்கிளை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. முழு நிகழ்வின் பின்ணனியை விரிவாக பார்க்கலாம்.

தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த மதிவாணன் என்பவர் மனு ஒன்று தாக்கல் செய்கிறார். அதில் கடந்த மார்ச் மாதம் தென்காசி மாவட்டம் ராயகிரி பகுதியில் நண்பரின் தந்தை இறந்துவிட்டதால் அங்கு சென்று அவருக்கு மரியாதை செய்ய என்னுடைய நண்பர்களுடன் சென்றேன். அப்பொழுது அங்கு இருக்கும் சிலர் இந்த இடத்திற்கு தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த நீ எப்படி வரலாம் என்று ஜாதியை கூறி திட்டியுள்ளதாக தெரிவிக்கிறார். மேலும் நான் அங்கு இருந்தால் இறந்தவருக்கு இறுதி சடங்கு நடக்க நாங்கள் யாரும் ஒத்துழைக்க மாட்டோம் என்று மிரட்டியதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

பிறகு என்னை அழைத்து சென்ற நண்பர்களை மறுநாள் அழைத்து இறப்பு நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த நபரான என்னை அழைத்து வந்ததால் ரூ. 1 லட்சம் அபராதம் மற்றும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இது மட்டும் இல்லாமல் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார். இதனை சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை. அந்த நபர்களை கைதி செய்யவும் இல்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு அளித்துள்ளார். பின்னர் நீதிமன்றத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை அக்டோபர் 12 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

என்ன தான் மாடர்ன் உலகத்திற்கு மாறினால், இன்னும் இந்த ஜாதி வன்கொடுமை, தீண்டாமை நம் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்