உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பப்ஜி விளையாட செல்போன் தராததால் தனது தாயை 16 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா லாக்டவுன் மாணவர்களையும் சிறுவர்களையும் செல்போனுக்கு அடிமையாகி வைத்துள்ளது. அதிலும் ஆன்லைன் கேம் போன்றவை மிகவும் அடிமையாக வைத்துள்ளது. அவ்வாறு அடிமையானவர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது, மேலும் தற்கொலை செய்துகொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது நடந்துகொண்டுதான் உள்ளது.
அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் 16வயது சிறுவன் இவனது தந்தை மேற்குவங்க மாநிலத்தில் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் தனது தாய் மற்றும் தங்கையுடன் அவர்களது வீட்டில் தங்கியிருந்துள்ளான். பப்ஜி விளையாட செல்போன் தராத காரணத்தால் தனது தாயை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து வெளியே கூறினால் உன்னையும் கொன்றுவிடுவேன் என கூறி தனது தங்கையை மிரட்டி வைத்துள்ளான்.
மேலும் இறந்த உடலுடன் இரண்டு நாட்கள் தங்கி இருந்த அவன் பின்னர் தனது நண்பர்கள் இரண்டு பேரை அழைத்து எதுவும் நடக்காதது போல் காட்டிக்கொள்ள முட்டை கறி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளான். அதோடு, வீட்டில் துர்நாற்றம் வீசுவதை கட்டுப்படுத்த ரூம் ப்ரெஷ்னரை பயன்படுத்திய திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் வீட்டிலிருந்து இருவரும் வெளியே வராமல் இருந்துள்ளனர், மேலும் துர்நாற்றமும் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது ஒரு அறையில் இருந்து அதிகமாக துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது, அங்கு சென்று பார்த்தபோது அவனது தாய் இறந்துகிடந்துள்ளார். உடனே பொலிஸாருக்கு தகவல் கொடுத்த அவர்கள் மற்றொரு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அவனது தங்கையை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் உடலை மீட்ட போலீசார் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர், அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடந்தவற்றை கூறியுள்ளான்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான சிறுவன் தனது தந்தையின் லைசன்ஸ் துப்பாக்கியை எடுத்து தாயை சுட்டு கொன்றுள்ளான். மேலும் கொலையை மறைக்க பல்வேறு முறைகளை கையாண்டுள்ளான் ஆனால் துர்நாற்றம் வீசியதால் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கூறினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…