Tamilnadu News Live : தமிழகத்தில் சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை முதல்முறையாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இந்நிலையில் சென்னை துறைமுகத்தில் கார்டிலியா என்கிற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து தமிழக சுற்றுலாத்துறை புதிய திட்டத்தை செயல்படுத்துகிறது.
அதன்படி, இந்த திட்டத்தில் சென்னையில் இருந்த புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சொகுசு கப்பலில் மக்கள் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு கப்பல் 2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த சொகுசு கப்பலின் கட்டணங்களை பொறுத்தவரை தனியார் நிறுவனமே நிர்ணயம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சொகுசு கப்பலில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் முதன் முறையாக 10 அடுக்கு கொண்ட சொகுசுக் கப்பலை அறிமுகம் செய்துள்ளது. இந்த கப்பலில் 10 உணவகங்கள், பார்கள், ஸ்பா, கடைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…