மதுரை பழங்காநத்தத்தில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதினம், இந்தி கோவில்கள் அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாரமாக அமைந்துவிட்டது, மேலும் அறநிலையதுறையை கழிக்கவேண்டும் எனவும் ஆன்மீகத்தை திருடி திராவிடமாக்கிக் கொண்டார்கள் என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் பாரதியார் தற்போது இருந்திருந்தால் "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே" என பாடியிருப்பார், அந்த அளவிற்கு டாஸ்மாக் அதிகரித்துவிட்டது என கூறியுள்ளார். மேலும் ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என கூறுகிறார்கள், நாங்கள் ஏன் அரசியல் பேசக்கூடாது, என கேள்வி எழுப்பினார், முதலில் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை? அரசியல்வாதிகள் கோயிலில் தர்க்காராக வந்து இருந்து கொள்கிறார்கள். கோயில் நகைகளை உறுக்குவதாககூட கூறுகிறார்கள். என குற்றம் சாட்டியுள்ளார்.
என்னுயிர் தலைவா’ என்பதை தல என மாற்றி விட்டார்கள். திராவிட பூமி என்று சொல்லிக்கொண்டு இறந்தவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். கோயில் நம்மைவிட்டு போனால் நமது சமயமும் நம்மை விட்டு போய்விடும் என கூறியுள்ளார்.
மேலும் இலவசமாக கோவணமும் திருவோடும் கொடுக்கும் திட்டத்தை மட்டும் பாக்கி வைத்துள்ளது திராவிட கட்சிகள். `திராவிடர் என்பதற்கு அர்த்தம் என்ன’ என சீமான் கேட்ட கேள்விக்கு தற்பொழுது வரை யாரும் பதில் சொல்லவில்லை. `திராவிட பாரம்பரியம்’ என்று சொல்லும் அரசியல்வாதிகள் விபூதி பூச மறுக்கிறார்கள். ஆனால் ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக்கொள்கிறார்கள் என பேசினார்.
சாமியார்கள் யாசகம் பெற்று சாப்பிட வேண்டும் என கூறிய வெங்கடேசன் எம்பி என்னுடன் ஒருவாரம் தங்கியிருந்தால் சுருண்டுபோய் விடுவார் என கூறியுள்ளார். மேலும் இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் படமெடுக்கும் விஜய் படங்களை பார்க்காதீர்கள் என வலியுறுத்தினார். மேலும் சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்குவது சரி என்றால் தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்க கூடாது?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால், என்னை சங்கி என சொல்கிறார்கள் என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…