Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

பாஜகவுக்கு எதிராக ஜிகாத் செய்வோம்.. மம்தா பானர்ஜி அறைகூவல்!!

Sekar June 30, 2022 & 11:23 [IST]
பாஜகவுக்கு எதிராக ஜிகாத் செய்வோம்.. மம்தா பானர்ஜி அறைகூவல்!!Representative Image.

மேற்கு வங்காள ஆளுநர் ஜக்தீப் தன்கர் முதல்வர் மம்தா பானர்ஜியிடம், திரிணாமுல் காங்கிரஸ் ஜூலை 21 ஆம் தேதியை பாஜகவுக்கு எதிரான ஜிஹாத் நாளாக அனுசரிக்கும் என்று கூறிய கருத்தை உடனடியாக திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளார். 

ஜிஹாத் என்ற அரபு வார்த்தையின் அர்த்தம் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிரான போராட்டம் அல்லது பாவத்திற்கு எதிராக தனக்குள்ளேயே உள்ள ஆன்மீக போராட்டம் என்பது பொருளாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் தன்கர், மம்தாவின் இத்தகைய சர்வாதிகார மற்றும் ஜனநாயக விரோத அறிக்கை ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு சாவு மணியை எழுப்புவதாகக் கூறியுள்ளார். 

முன்னதாக கடந்த செவ்வாயன்று அசன்சோலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக ஜிஹாத் செய்யவுள்ளதாக பேசியதாக கூறப்படும் நிலையில், அரசியலமைப்பு ரீதியாக ஆளுநர் இதில் தலையிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக பிரதிநிதிகள் குழு அவருக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

"ஜூலை 21, 2022 அன்று பிஜேபிக்கு எதிரான 'ஜிஹாத்' என்ற அரசியலமைப்பிற்கு முரணான இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்" என்று தன்கர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி, தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல்தொடர்பு நகலை பகிர்ந்துள்ளார்.

1993 ஆம் ஆண்டு மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியில் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, ஜூலை 21 ஆம் தேதி நடந்த பேரணியின் போது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21 ஆம் தேதியை தியாகிகள் தினமாக திரிணாமுல் கட்சி நினைவு கூர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்