ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள குர்ராடா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட சூரியநாராயணா. 30 வயதான இவர் அதேபகுதியை சேர்ந்த தேவிகா என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால், வெங்கடசூரிய நாராயணாவின் காதலை தேவிகா ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும் அவர் தேவிகாவிடம் தனது காதலை ஏற்க வேண்டும் என்று விடாமல் வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், தேவிகா நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, வழியில் குறுக்கிட்ட வெங்கட சூரியநாராயணா தேவிகாவை நிறுத்தி காதல் குறித்து மீண்டும் பேசியுள்ளான்.
தனது காதலை ஏற்காவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்றும் அவரை மிரட்டியுள்ளார். ஆனால், இதற்கெல்லாம் பயப்படமாட்டேன், நீ என்னை கொலை செய்தாலும் உன்னுடைய காதலை ஏற்கமாட்டேன் என்று தேவிகா தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் நடுரோட்டில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த வெங்கட சூரியநாராயணா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தேவிகாவின் கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த தேவிகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் வெங்கட சூரிய நாராயணாவை பிடித்து அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர். காதலை மறுத்த பெண்ணை நடுரோட்டில் ஈவு இறக்கம் இல்லாமல் படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…