காஞ்சிபுரம் படப்பையை சேர்ந்த கூலித் தொழிலாளியான வேல்முருகன், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் 10 ஆம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக ஜாதிச் சான்றிதல் வேண்டி சுமார் 5 வருடங்களாக பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராடி வந்துள்ளார். இதனால், வெறுத்துப்போன வேல்முருகன் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்க்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இச்சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வேல்முருகனின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும், குழந்தைகளுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்.
மேலும், கடந்த ஜூலை மாதம் திருத்தணி அருகே உள்ள பள்ளிப்பட்டு பகுதியில் செயல்படும் வாட்டாட்சியர் அலுவகம் முன்பு கொண்டாரெட்டி சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்காத விரக்தியில் 75 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதுபோல ஜாதிச் சான்றிதழ் கிடைக்காமல் பலரது உயிர் பறிப்போய் இருக்கிறது. பழங்குடி மக்களில் சில பிரிவினர் ஜாதிச் சான்றிதழுக்காக வருடக்கணக்கில் போராடி வருகின்றன. இதனால் நிறைய மாணவ, மாணவிகள் கல்வி, வேலைவாய்ப்பு, அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.
பழங்குடி மக்களுக்கு ஜாதிச் சான்றிதல் கொடுக்கும் அதிகாரம் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு இருந்தாலும், அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு ஜாதிக் சான்றிதழ்கள் வழங்காமல் வருடக்கணக்கில் காலதாமதம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.
ஜாதிச் சான்றிதழுக்கு தேவையான உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தாலும், போதுமானதாக இல்லை என்று கூறி அவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல், சாதிச் சான்றிதழ் கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வருவாய்த் துறை அலுவலகங்களில் குவிந்து கிடக்கின்றன.
இதுபோன்ற அதிகாரிகளின் அலட்சியத்தால் வாழ்வைத் தொலைத்துவிட்டு நிற்பவர்கள் ஏராளம். இனியும் தற்கொலைகள் தொடராமல் இருக்க, சாதிச் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, குறிப்பிட்ட காலத்தில் சான்றிதழ் வழங்க வேண்டும். இதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைவருக்கும் சமநீதி வழங்குவதே திராவிட மாடல் அரசின் நோக்கம் என்று கூறிக் கொள்ளும் திமுக அரசும், தமிழக முதல்வரும் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற முன்வர வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…