தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், காரைக்காலுக்கு கிழக்கு-தென்கிழக்கே 560 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கி.மீ. தூரத்தில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 9ம் தேதி நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடல் பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மரக்காணம் மற்றும் 19 மீனவ கிராமங்கள் மீனவர்கள் தங்கள் 1500 க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பாதுகாப்பாக மேடான பகுதிக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றது. கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. பாதுகாப்பாக தங்களது படகுகளை கரை ஓரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கடலூர், கிள்ளை, சாமியார் பேட்டை உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்
.
இதேபோல் கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றது. கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. பாதுகாப்பாக தங்களது படகுகளை கரை ஓரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கடலூர், கிள்ளை, சாமியார் பேட்டை உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். புயல் எச்சரிக்கை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். அதில் 27 பேர் கொண்ட குழு சிதம்பரம் வந்தடைந்தனர். கமாண்டர் குல்சந்தர்முன் தலைமையில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 25 வீரர்களைக் கொண்ட 27 பேர் கொண்ட குழு சிதம்பரம் பகுதியில் பேரிடர் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் மீட்புப் பணிக்கு தயார் நிலையில் இருப்பதாகவும், பேரிடர் மீட்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், வீரர்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் இந்த குழுவின் கமாண்டர் மற்றும் வீரர்கள் தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…