Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,718.77
229.78sensex(0.32%)
நிஃப்டி22,047.30
51.45sensex(0.23%)
USD
81.57
Exclusive

மணிப்பூர் வன்முறையில் அதிரடி திருப்பம்...அப்பாவி மக்கள் உயிரிழப்பு | Manipur Violence News

Priyanka Hochumin Updated:
மணிப்பூர் வன்முறையில் அதிரடி திருப்பம்...அப்பாவி மக்கள் உயிரிழப்பு | Manipur Violence NewsRepresentative Image.

மே மாதத்தின் தொடக்கத்தில் மணிப்பூரில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. அதற்கு போலீஸ் தரப்பினரும் உடந்தை என்று பலரும் கூறிவருகின்றனர். அது குறித்து முழு விவரத்தையும் இந்த பதிவில் பாப்போம்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் நிலப்பகுதி மக்களுக்கு இடையே நடக்கும் சண்டை தான் மணிப்பூரிலும் நடைபெற்றது. மலைப்பகுதியில் வசிக்கும் "குகி" மலைவாழ் மற்றும் நிலப்பகுதியில் வசிக்கும் "மெய்ட்டி" என்றும் கூறப்படுகிறது. இதில் மெய்ட்டி பிரிவில் இருக்கும் மக்கள் தான் பெரும்பான்மை சமூகமாக உள்ளார். இவர்களில் மெய்ட்டி சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் ஒரு சிலர் எஸ்டி பிரிவையும் சேர்ந்தவர்கள். குகி சமூகத்தை சேர்ந்த மக்கள் எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள்.

இப்போது பிரச்சனை என்னவென்றால், மெய்ட்டி பிரிவில் இருக்கும் ஹிந்துக்களை எஸ்டி பிரிவில் கொண்டு வர வேண்டும் என்று அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். அப்படி செய்தால் குகி சமூகத்தினருக்கு கிடைக்கும் அங்கீகாரம் குறைக்கப்படும் என்று அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை பல காலமாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக அரசு அதிக பெரும்பாண்மை வகிக்கும் மெய்ட்டி சமூகத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டால் தேர்தலில் வெற்றி எளிதாகி விடும் என்று எண்ணி அந்த கோரிக்கையை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மெய்ட்டி பிரிவினர் தாக்குதல் ஏற்படுத்தினர். இதனால் போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் இதுவரை 70-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்போது வெளியான தகவல் இந்த போராட்டம் நடைபெறுவதற்கு முன்னர் குகி சமூகத்தை சேர்ந்த காவலர்களை ஆயுதங்கள் எதும் தராமல் நிராயுதபாணியாக நிற்க வைத்துள்ளதாக 10 பழங்குடி எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். அது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்று மணிப்பூர் காவல்துறை தலைவர் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்