Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

அண்டார்டிகாவையும் விட்டுவைக்காத பிளாஸ்டிக்...!

madhankumar June 09, 2022 & 16:57 [IST]
அண்டார்டிகாவையும் விட்டுவைக்காத பிளாஸ்டிக்...!Representative Image.

உலகம் முழுவதும் அதிக பிரச்சனைகளை ஏற்படுத்திவரும் பிளாஸ்டிக் மாசு தற்போது அண்டார்டிகாவையும் விட்டுவைக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களின் பேராசை காரணமாக உலகம் தொடர்ந்து மோசமான பாதிப்பை எதிர் கொண்டு வருகிறது. ஏற்கனவே, பல உயிரினங்கள் மனிதனின் பேராசையால் உலகில் இருந்து ஒட்டுமொத்தமாக அழிந்து போயுள்ளது. பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கையை தற்போது நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது, மேலும் பிளாஸ்டிக் காரணமாக அனைத்து வகையான உயிரினங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

உலகின் மனிதர்கள் மற்றும் விலங்குகள் இல்லாத இடங்களைக் கூட கண்டுபிடித்துவிடலாம். ஆனால், பிளாஸ்டிக் இல்லாத இடங்களைக் கண்டுபிடிப்பது கடினமாகி விட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்தே ஆய்வாளர்கள் இன்னும் மீளாத நிலையில், அடுத்த அதிர்ச்சியாக அண்டார்டிகாவின் பனிப்பாறைகளில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் உள்ள கேன்டர்பரி பல்கலைக்கழகத்தின் மாணவர் அலெக்ஸ் ஏவ்ஸ், 2019இல் அண்டார்டிக்காவில் உள்ள ராஸ் ஐஸ் ஷெல்ஃப் முழுவதும் 19 இடங்களில் இருந்து பனி மாதிரிகளைச் சேகரித்தார். அந்த மாதிரிகளில் தான் ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான மைக்ரோ பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கடலின் ஆழமான பகுதிகளிலும், ஆர்க்டிக் பனிக்கட்டிகளிலும் மைக்ரோ பிளாஸ்டி துகள்கள் காணப்பட்டன. ஆனால் இதுவரை புதிதாக விழுந்த பணியில் கண்டறியப்பட்டது இல்லை. இப்போது தான் முதல்முறையாகப் புதிதாக விழுந்த பணியில் அண்டார்டிக்காவில் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இந்த பிளாஸ்டிக் துணுக்குகள் காற்றில் அதிக தூரம் பயணித்து வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்