Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

அமைச்சர் மனோ தங்கராஜ் பின்லாந்துக்கு இந்த விஷயமாக தான் போனாறா?

Nandhinipriya Ganeshan November 18, 2022 & 19:54 [IST]
அமைச்சர் மனோ தங்கராஜ் பின்லாந்துக்கு இந்த விஷயமாக தான் போனாறா?Representative Image.

தமிழக தகவல்தொழில் நுட்பத் துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல், தனது துறை ரீதியிலான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் மனோ தங்கராஜ் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன்படி, தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த மாநாடுகள், முதலீடுகளை ஈர்க்கும் நிகழ்ச்சிகள் என்று எதுவாக இருந்தாலும் அனைத்திலும் ஆர்வத்துடன் சென்று பங்கேற்று வருகிறார். அந்த வகையில், ஏற்கனவே லண்டன், ரோம் என இரண்டு நாடுகளுக்கு சென்றிருக்கிறார். தற்போது, பின்லாந்தில் 2 நாட்கள் நடைபெறும் SLUSH 2022 என்ற உலகளாவிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துக் கொண்டுள்ளார். 

பின்லாந்தை பொறுத்தவரை பள்ளிக்கல்விக்கு உலக நாடுகளுக்கு முன் மாதிரியாக திகழும் நாடு. தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் அங்கு பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

2 நாட்கள் நடைபெறும் இந்த SLUSH 2022 மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 2,000க்கும் மேற்பட்ட ஐடி நிறுவன அதிபர்கள் பங்கேற்றனர். மேலும், ஸ்லஷ் மாநாட்டில் பங்கேற்ற அவர், பின்லாந்தில் உள்ள meetIQM என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரான டாக்டர் ஜூஹா வர்டியானெனை சந்தித்து, தொழில்நுட்பம் மற்றும் அதன் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றி ஆக்கப்பூர்வமான விவாதம் நடைப்பெற்றதாக, அமைச்சர் மனோதங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், பெட்ரி சாரினென் (Innovation Leader Aalto University) மற்றும் ஹென்ரிக் கெய்னோனென் (Head of Business Helsinki) ஆகியோருடன் ICT அகாடமியின் ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின் மூலம் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நல்ல மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Also Read: அம்பேத்கரை அவமதித்த அச்சக உரிமையாளருக்கு ஆப்பு; தட்டித்தூக்கிய காவல்துறை! 

Tag: Slush 2022 Conference At Finland | Mano Thangaraj Finland | Minister Mano Thangaraj | International Trip | Information Technology | Mano Thangaraj | Slush 2022 Finland | தமிழக தகவல்தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் | ஸ்லஷ் 2022.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்