Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

தாயின் கண்முன்னே மகள் கூட்டு பலாத்காரம் - கொடூரத்தின் உச்சம்..

Nandhinipriya Ganeshan October 11, 2022 & 13:07 [IST]
தாயின் கண்முன்னே மகள் கூட்டு பலாத்காரம் - கொடூரத்தின் உச்சம்..Representative Image.

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமியும் அவரது தாயும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தியோகரில் ஒரு விழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மதுபூர் பகுதி வழியாக வரும்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் ஐந்து பேர் இருவரையும் வழிமறித்துள்ளனர்.

அப்போது சிறுமியை மட்டும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தனது மகள் துடிப்பதை கண்டு அலறி அடைத்து தடுத்த தாயையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் நேற்று அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார் இரண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளனர். மேலும், மூவரை தேடி வருகின்றனர். 

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேசிய தியோகர் காவல் கண்காணிப்பாளர், சிறுமிக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவு வந்ததும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்