தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று மதுரை செல்கிறார். சிவகங்கை, புதுக்கோட்டை பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக செல்லும் முதல்வர் இன்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு சென்று அங்கு கட்டப்பட்டுவரும் கலைஞர் நூலகத்தை பார்வையிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இரவில் முதலமைச்சர் மதுரையிலேயே தங்கும் நிலையில், நாளை அங்கிருந்து சாலைமார்க்கமாக சிவகங்கை செல்கிறார். அங்கு செல்லும் அவர் சமத்துவபுரத்தை திறந்து வைக்கவிருக்கிறார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து, மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதனையடுத்து புதுக்கோட்டை செல்லும் முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு இரவு 8 மணியளவில் திருச்சி செல்கிறார். அதனையடுத்து இரவு அங்கிருந்து புறப்பட்டு சென்னையை அடைவர் என கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…