ஹரியானா மாநிலம் குருகிராமில் மசூதியை சேதப்படுத்தியதாகவும், அங்குள்ள மக்களைத் தாக்கியதற்காகவும் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குருகிராமில் உள்ள போரா கலன் பகுதியில் நேற்று மாலை இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. முதல் தகவல் அறிக்கையின்படி, அப்பகுதியைச் சேர்ந்த சில குண்டர்கள் உள்ளூர் மசூதியை சேதப்படுத்தி, அங்கிருந்த மக்களை அடித்து, கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் மர்மநபர்கள் மசூதி கேட்டை பூட்டிவிட்டு ஓடிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலாஸ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சுபேதார் நாசர் முகமது, போரா கலனில் நான்கு முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன என்றார். நேற்று, அவரும் மற்றவர்களும் மசூதியில் தொழுகை நடத்தும்போது, சிலர் உள்ளே புகுந்து அவர்களைத் தாக்கினர். அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அவர்களை மிரட்டியதாகவும் நாசர் முகமது கூறினார்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது ஐபிசி பிரிவுகள் 295-A (வேண்டுமென்றே மத நம்பிக்கைகளை சீர்குலைத்தல்), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 506 (குற்றமிழைத்தல்), 147 (கலவரம்), 148 (ஆயுதங்களை ஏந்தி கலவரம் செய்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ் சவுகான், அனில் பதவுரியா மற்றும் சஞ்சய் வியாஸ் ஆகிய 3 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…