Fri ,Jun 09, 2023

சென்செக்ஸ் 62,547.11
118.57sensex(0.19%)
நிஃப்டி18,534.10
46.35sensex(0.25%)
USD
81.57
Exclusive

பிரம்மாண்டத்தின் உச்சம்! புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.. | New Parliament Building India

Nandhinipriya Ganeshan Updated:
பிரம்மாண்டத்தின் உச்சம்! புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.. | New Parliament Building IndiaRepresentative Image.

இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாக உள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக 'சென்டிரல் விஸ்டா' என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, பழைய கட்டிடத்தை இடிக்காமல் அதை ஒட்டியே 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பிரம்மாண்டத்தின் உச்சம்! புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.. | New Parliament Building IndiaRepresentative Image

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு:

கொரோனா காலத்திலும் இதற்கான பணிகள் நடைபெற்று வந்தநிலையில், தற்போது பணிகள் முடிவடைய உள்ளது. டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்ட புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு அறை, நூலகம், பல குழு அறைகள், கேன்டீன், வாகன பார்க்கிங் வசதிகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், பழைய கட்டிடத்தில் மக்களவையில் 543 இருக்கைகளே உள்ள நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவையில் 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மாநிலங்களவையிலும் 250க்குப் பதிலாக 300 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டங்கள் மக்களவையில் தான் நடக்கும் என்பதால் அங்கே மொத்தமாக 1,280 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், புதிய பார்லிமென்டில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டின் மார்ஷல்களுக்கும் புதிய ஆடைக் கட்டுப்பாடு இருக்கும். 

பிரம்மாண்டத்தின் உச்சம்! புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.. | New Parliament Building IndiaRepresentative Image

சுமார் ரூ.13,450 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் மே 28 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழை மக்களவை சபாநாயகர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து, திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை முறைப்படி வழங்கினார். மேலும், மோடி அரசின் ஒன்பதாம் ஆண்டு [மே 26, 2014] நிறைவையொட்டி புதிய கட்டிடத்தை திறப்பதற்காக பிரமாண்ட விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு, 2019 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நாளான மே 30 முதல் பிரச்சாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்