Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

உணவளித்த எஜமானர் மரணம்.. கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய குரங்கு!!

Sekar October 20, 2022 & 14:25 [IST]
உணவளித்த எஜமானர் மரணம்.. கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய குரங்கு!!Representative Image.

இலங்கையில் தனக்கு உணவளித்த எஜமானர் இறந்ததால், அவரின் உடல் அருகே அமர்ந்து குரங்கு ஒன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனிதர்களை விட மனிதர்கள் வளர்க்கும் விலங்குகள் தனது எஜமானர்களுடன் எப்போதும் நெருக்கமாக இருப்பதை நாம் அறிவோம். இது தொடர்பான விடியோவும் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம்.

அந்த வகையில் இலங்கையில் குரங்கு ஒன்று தனக்கு உணவளித்து வளர்த்து வந்த எஜமானர் இறந்த நிலையில், அவரின் உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு வந்த குரங்கு, அவரின் உடல் அருகே அமர்ந்து கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தியது.

மேலும் அவரின் மீது போடப்பட்டிருந்த மாலையை உருவி முத்தம் கொடுத்து கட்டித்தழுவிய காட்சிகள் அங்கிருந்தோரை நெகிழ வைத்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்