Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,677.13
-195.16sensex(-0.26%)
நிஃப்டி22,356.30
-49.30sensex(-0.22%)
USD
81.57
Exclusive

தாய்க்கு 2-வது திருமணம் நடத்திய மகள்..! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்..!

Muthu Kumar August 20, 2022 & 09:45 [IST]
தாய்க்கு 2-வது திருமணம் நடத்திய மகள்..! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்..!Representative Image.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ரதிமேனன் (வயது 59) என்பவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது 2 மகள்களளுக்கும் திருமணமான நிலையில் ரதிமேனன் தனிமையில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த ரதிமேனனின் மகள் பிரசிதா தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்துள்ளார். 

இதனையடுத்து, தனது தாய்க்கு தகுந்த மணமகனை தேட தொடங்கியுள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த திவாகரன் (63) என்பவர் மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் தான் தனது தாய்க்கு ஏற்ற துணை என்று பிரசிதா முடிவு செய்தார்.

இதனையடுத்து, அவரிடம் தனது தாய்க்கு ஒரு துணை வேண்டும், அது நீங்களாக இருந்தால் மிகவும் நல்லது என் விளக்கமாக கூறினார். இதனை புரிந்து கொண்ட திவாகரன் 2-வது திருமனத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் திருச்சூர் திருவம்பாடி கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்