உலகம் முழுவதும் அன்னையர்களை போற்றும் வகையில் "அன்னையர் தினம்" கொண்டாடப்படுகிறது. இந்த பதிவில் அன்னையர் தினம் தேதி, கொண்டாடப்படுவதற்கான காரணம் போன்ற விவரங்களைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
அன்னையர் தினம் 2023 தேதி:
உலகளவில் அன்னையர் தினம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவைச் சேர்த்து பல நாடுகளில் இந்த ஆண்டு மே 14, 2023 அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் நமக்காக காலம் முழுக்க வாழும் தாய்மார்களை கௌரவிக்கும் வண்ணம் இத்தினம் பெருமிதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்னையைர் தினம் கொண்டாட காரணம்?
அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் (GRAFTON) என்னும் கிராமத்தில் வாழ்ந்து வந்தவர் "ஜார்விஸ்". 20ம் நூற்றாண்டில் இந்த பூமியே யுத்தகளமாக காட்சியளித்தது. இதனால் போருக்கு சென்ற பல அமெரிக்கா வீரர்கள் யுத்தத்தில் பலியாகினர். அவர்களின் குடும்பம் உணவின்றி, இருக்க இருப்பிடமின்றி அனாதையாகி வாழ்ந்தனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார் ஜார்விஸ். இப்பேர் பட்ட தியாகி ஜார்விஸ் 1904ல் காலமானார். தன்னுடைய தாயின் வாழ்க்கையை பார்த்து வளர்ந்த அவரின் மகள் அனா ஜார்விஸ் அதே போல் மக்களுக்கு சேவை செய்ய முடிவெடுத்தார்.
அது மட்டும் இன்றி 1908ம் ஆண்டு மே மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் தன்னுடைய தாயின் தியாகத்தை போற்றும் வகையில் சிறப்பு வழிபாடு செய்தார். இதன் மூலம் தாயிற்காக முதன் முதலில் அன்னையர் தினம் கொண்டாடிய பெருமை அனா ஜார்விஸ்-க்கு சென்றடையும். தான் மட்டும் இந்த உலகத்தில் இருக்கும் அனைவருமே தங்கள் தாயின் தியாகத்தை போற்றும் வகையில் அன்னையர் தினம் கொண்டாட வேண்டும் என்று நினைத்தார்.
எனவே, தன்னுடைய இருப்பிடமான பென்சில்வேனியா மாநில அரசிடம் இது குறித்து விவாதம் மேற்கொண்டார். அதன் பலனாக 1913 ஆம் ஆண்டு அன்னையர் தினம் அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் இந்த கொண்டாட வேண்டும் என்று எண்ணி அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சனிடம் கோரிக்கை விடுத்தார். அவரின் கருத்த ஏற்று 1914ம் ஆண்டு வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதனை 46 நாடுகள் ஒப்புக்கொண்டு பின்பற்றனர்.
அன்னையர் தினம் கொண்டாடும் முக்கியத்துவம்:
தனது வாழ்க்கை முழுவதும் பிள்ளைகளை வளர்ப்பது, குடும்பத்தை பார்த்துக்கொள்வது, சமுதாயத்திற்கு பணியாற்றுவது என்று வாழும் தாய்மார்களை கௌரவிக்கவும், அவர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தவும் இந்நாள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…