பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப், இவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் தளபதியும் ஆவார், தளபதி பொறுப்பில் இருந்து படிப்படியாக உயர்ந்து அந்த நாட்டின் அதிபராக பதவி வகித்தார். இதனையடுத்து பதவி விலகிய பிறகு துபாயில் குடியேறினார். இந்நிலையில் 78 வயதாகும் இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் உயிரிழந்துவிட்டதாக பாகிஸ்தானின் செய்தி ஊடகமான Waqt newsல் செய்தி வெளியிட்டன.
அவருடைய உடல் உறுப்புக்கள் செயலிழக்க தொடங்கி விட்டன. அவர் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் அவர் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் முஷரஃப் குடும்பத்தினர் அவரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் "முஷாரஃப் அமிலாய்டோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 3 வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது வெண்டிலேட்டரில் இல்லை. குணமடைய வாய்ப்பில்லாத, உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கும் கடினமான கட்டத்தை எதிர்கொண்டு வருகிறார். அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நடந்த புரட்சியில் 1999 ல் அந்நாட்டு அரசு கலைக்கப்பட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு 2001 முதல் 2008 வரை பாகிஸ்தான் அதிபராக பதவியில் முஷாரஃப் இருந்து வந்தார். இதனையடுத்து 2016ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்ற முஷாரஃப், அதன் பிறகு பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையான 1947ல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தது பர்வேஸ் முஷரஃப் குடும்பம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…