ராமேஸ்வரம் அருகே வீடு போன்று மர்ம பொருள் கடல் மிதந்து வந்தால் பரபரப்பு பூஜை செய்யப்பட்ட புத்தர் சிலைகளும் மிதந்து வந்ததால் அதனைக் காண ஏராளமான மக்கள் குவிந்தனர்.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் வீடு போன்று வடிவமைக்கப்பட்ட மர்ம பொருள் கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கி உள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற மீனவர்கள் கரை ஒதுங்கிய மர்ம பொருளை பார்த்ததை அறிந்து மற்றவருடன் தெரிவித்ததை அடுத்து நூற்றுக்கணக்கான மீனவ மக்கள் கடலில் மிதந்து வந்த மர்ம பொருளை பார்வையிட்டு புகைப்படம் எடுக்க ஒரே இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
.
மேலும் மிதந்து வந்த மர்ம பொருளின் உள்ளே பல்வேறு வகையான புத்தர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு அந்த சிலைக்கு பச்சரிசி, நெல் உள்ளிட்ட பல்வேறு தானியங்களைக் கொண்டு பூஜை செய்து பரிகாரம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் கடற்கரையில் குவிந்த பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்தி மிதந்து வந்த மர்ம பொருள் எங்கிருந்து வந்தது, வேறு ஏதேனும் கடத்தல் பொருள்கள் வந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#இலங்கையில் இருந்து #thangachimadam வந்து கரை ஒதுங்கிய #புத்தர் சிலைகள்.......
— ராமேஸ்வரம் மீனவன் (@hendry1289) January 17, 2023
சிலர் இது #மியான்மர் நாட்டில் இருந்து வந்ததாக கூறுகின்றனர்..... pic.twitter.com/D6LG35ZtGv
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…