Wed ,Nov 29, 2023

சென்செக்ஸ் 66,901.91
727.71sensex(1.10%)
நிஃப்டி20,096.60
206.90sensex(1.04%)
USD
81.57
Exclusive

தலித் இளைஞனை காதலித்ததால்.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. தந்தை வெறிச்செயல்!!

Sekar June 08, 2022 & 16:45 [IST]
தலித் இளைஞனை காதலித்ததால்.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. தந்தை வெறிச்செயல்!!Representative Image.

கர்நாடகாவின் மைசூரு அருகே பெரியபட்னா தாலுக்காவில் உள்ள ககுண்டி கிராமத்தில் தனது 17 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்றதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கல்லூரி மாணவியான அந்த பெண் பக்கத்து கிராமத்தில் உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனை அவர் காதலித்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விஷயம் தெரியவந்த மாணவியின் குடும்பம் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தலித் இளைஞனுடன் தொடர்பு கொள்வதை நிறுத்தும்படி கூறியுள்ளது.

ஆனால் பெற்றோரின் வார்த்தைகளுக்கு அந்த கல்லூரி மாணவி செவிசாய்க்காததால், மாணவியின் தந்தை அவரை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். தகவல் வெளியே தெரியவந்ததை அடுத்து மாணவியின் பெற்றோரை மைசூர் போலீசார் கைது செய்தனர்.

மைசூரு எஸ்பி சேத்தன் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். பெண் வொக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர், சமபந்தப்பட்ட இளைஞன் தலித் சமூகத்தை சேர்ந்தவர்" என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்