தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயலானது இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மாமல்லபுரத்தில் கரையைக் கடந்து. இதனால் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. குறிப்பாக புயல் மையம் கொண்ட நாள் முதலே பணிக்குச் செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடல் சீற்றம் காரணமாக கடலோரத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். நாகை மாவட்டத்தைப் பொறுத்தவரை மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி இருந்ததால், 5 ஆவது நாளாக இன்றும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால்
மாவட்டம் முழுவதும் 700 விசைப்படகுகள், 3000 பைபர் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன. 70 ஆயிரம் மீனவர்கள், சுமை தூக்குவோர் , சிருகுறு மீன் விற்பனையாளர்கள் என மீன்பிடி தொழில்சார்ந்த லட்சகணக்கான தொழிலாளர்கள் முடங்கியுள்ளதோடு, அவர்களது வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…