கன்னியாகுமரி: இளம் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கில் நாகர்கோவிலில் சேர்ந்த காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி (26). பெண் மருத்துவர் உள்ளிட்ட பல பெண்களை காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகி ஆபாசபடம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரின் பேரில் காசியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் காசியின் நண்பர்கள் டேசன் ஜினோ, தினேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளியான காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர். மேலும் அவரது லேப்டாப்பில் இருந்து 120பெண்களின் 400 ஆபாச வீடியோக்கள், 1900ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…